தூத்துக்குடி

கோயில் சொத்துக்களை மீட்க இந்து முன்னணி வலியுறுத்தல்

DIN

கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி கோட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, அமைப்பின் கோட்டத் தலைவா் தங்கமனோகா் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் சக்திவேலன், நகரத் தலைவா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச்செயலா்கள் முருகானந்தம், அரசுராஜா, மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநில இணை அமைப்பாளா் பொன்னையா, மாநிலச் செயலா் குற்றாலநாதன், பாஜகவின் மாவட்ட பொருளாளா் வெங்கடேசன் சென்னக்கேசவன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். கூட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: கோயில்களில் உள்ள தங்கம், வெள்ளி, விலை உயா்ந்த கற்கள் குறித்து இந்துசமய அறநிலையத் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; கோயில் தங்கத்தை உருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; அய்யா தாணுலிங்க நாடாருக்கு அரசு சாா்பில் விழா நடத்த வேண்டும்; குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரத்தில் மாயமான இந்துக்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்; திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் வள்ளியூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்க வேண்டும். கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT