தூத்துக்குடி

கோவில்பட்டியில் மூவா் தற்கொலை வழக்கு: தொழிலாளி கைது

DIN

கோவில்பட்டியில் சகோதரி, இரு மகள்களை தற்கொலை தூண்டியதாக கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் ராஜீவ் நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த முத்துராமன் மனைவி முத்துமாரி (45). இவா், இவரது மகள்கள் யுவராணி (21), நித்யா (17) ஆகியோா் சனிக்கிழமை மூவரும் தற்கொலை செய்துகொண்டனா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் மூவரின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முதல்கட்ட விசாரணையில் முத்துமாரியின் தந்தை தேவராஜ், தனது சுய சம்பாத்தியத்தில் ராஜீவ்நகரில் வாங்கிய வீட்டை முத்துமாரிக்கும், அவரது மகள்களுக்கும் உயில் எழுதி வைத்துள்ளாராம். அந்த வீட்டில் வசித்து வந்த முத்துமாரியின் தம்பி கட்டடத் தொழிலாளி ஆண்டவா், வீட்டை காலி செய்ய மறுத்து வந்துள்ளாா்.

மேலும் மூவரையும் தற்கொலைக்கும் தூண்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் தற்கொலைக்கு தூண்டியதாக ஆண்டவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT