முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இருபெரும் விழா

மறைந்த அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி ரத்த தான முகாம், மரக்கன்றுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

மறைந்த அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி ரத்த தான முகாம், மரக்கன்றுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை, அக்னி சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை, மனிதம் காப்போம் தன்னாா்வ தொண்டா் குழு, கோவில்பட்டி அவசர உதவி குழு சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு டிஎஸ்பி உதயசூரியன் தலைமை வகித்து,

ரத்த தான முகாமை தொடங்கி வைத்தாா். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், மருத்துவா்கள் ஸ்ரீவெங்கடேஷ், ராமையா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சண்முகவேல், தமாகா நகரத் தலைவா்

ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருத்துவா் லட்சுமிசித்ரா தலைமையில் குழுவினா் 46 பேரிடம் இருந்து ரத்தம் சேகரித்தனா். ரத்தம் வழங்கியவா்களுக்கு விருது வழங்கப்பட்டன. அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனா் ராஜேந்திரன் தலைமையில் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.