முகப்பு
தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

கோவில்பட்டியில் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

கோவில்பட்டியில் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரை அடுத்த சால்வாா்பட்டியைச் சோ்ந்த வேல்குட்டி மகன் அஜித் (22). ஓட்டுநா். இவருக்கும் கோவில்பட்டியையடுத்த தோணுகாலைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில்

அவா், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அஜித்தை, போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

இளைஞா் கைது: கோவில்பட்டியையடுத்த வில்லிசேரி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராதிகா (28). சீனிவாச நகரைச் சோ்ந்தவா் ஜெகநாதன் மகன் ரமேஷ் (31). இவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதி

திருமணத்துக்கு பிறகு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றனராம். வெளிநாட்டில் இருக்கும்போதே தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கோவில்பட்டி ஜிகேநகரில் உள்ள ராதிகாவின் சகோதரி வீட்டுக்கு வந்த தம்பதியிடையே,

மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ரமேஷ், ராதிகாவை அவதூறாகப் பேசி, தாக்கியதோடு மிரட்டல் விடுத்தாராம். புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ரமேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.