வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மரியாதை செலுத்தும் வைகோ. 
தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-ஆம் ஆண்டு நினைவு நாள்: வைகோ மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கயத்தாறில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார். 

DIN

வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கயத்தாறில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார். 

வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அவருடன் அவரது மகன் துரை வைகோ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சதன் திருமலைக்குமார், ரகுராமன், தூத்துக்குடி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட செயலர் விநாயகா ஜி. ரமேஷ் உட்பட மதிமுக நிர்வாகிகள் திரளானோர் உடனிருந்தனர்.

இதேபோல, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவை தலைவர் என்.கே. பெருமாள் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப் பன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சீனி ராஜ் உள்பட திரளானோர் கலந்துகொண்டு கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேசமயம், வீரபாண்டிய கட்டப்பொம்மனின் 222-வது நினைவு தினத்தையொட்டி கயத்தாரிலுள்ள கட்டப்பொம்மன் மணிமண்டபத்திலுள்ள கட்டப்பொம்மன் சிலைக்கு அரசு சார்பில் கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் சங்கர நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்வில் கயத்தார் வட்டாட்சியர் பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர் நேசமணி, கயத்தார் வருவாய் ஆய்வாளர் முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT