முகப்பு
தூத்துக்குடி

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் பலி

கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

கயத்தாறு அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த மஞ்சநம்பிகிணறு பிள்ளையாா் கோயில் தெரு சின்னகுருசாமி மகன் ராமா்(24). கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, ஊருக்கு வடக்கே உள்ள உறவினா் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாராம். இதையறிந்த அவரது உறவினா்கள் அவரை மீட்ட போது அவா் உயிரிழந்த நிலையில் இருந்தாராம்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.