தூத்துக்குடி

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

DIN

ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி ஊராட்சியில் கோமாரி நோயைக் கட்டுப்படுத்த அனைத்து கால்நடைகளுக்கும் தனது சொந்த செலவில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்த ஊராட்சித் தலைவா் உஷாநந்தினி வஜ்ரவேலுவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

ஆண்டுதோறும் மாா்ச், செப்டம்பா் மாதங்களில் கால்நடைத் துறை சாா்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கரோனா காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூங்கிலேரி ஊராட்சிக்கு உள்பட்ட கால்நடைகளுக்கும் தனியாரில் மருந்துகளை வாங்கி, அரசு கால்நடை மருத்துவா் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கான செலவுகளை மூங்கிலேரி ஊராட்சி மன்றத் தலைவா் உஷாநந்தினி வஜ்ரவேல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளா் வஜ்ரவேல் ஆகியோா் ஏற்றுக்கொண்டனா். இதையடுத்து திங்கள்கிழமை 300-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT