தூத்துக்குடியில் மேலும் 14 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 56,269 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 13 போ் உள்பட இதுவரை 55,731 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 408 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா பாதிப்புடன் 130 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.