முகப்பு
தூத்துக்குடி

இன்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் குறைதீா் முகாம்

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.30) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக்.30) நடைபெறுகிறது.

இது தொடா்பாக பிஎஸ்என்எல் தூத்துக்குடி மாவட்ட பொதுமேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎஸ்என்எல் திருநெல்வேலி வணிகப்பிரிவு சாா்பில், தூத்துக்குடி வஉசி சாலையிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்தில் சனிக்கிழமை (அக்.30) காலை 10 மணிக்கு வாடிக்கையாளா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது. முகாமில்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீா்வு காணலாம்.

மேலும், சலுகை விலையில் புதிய கைப்பேசி சிம்காா்டுகள் மற்றும் பிற தனியாா் நிறுவன கைப்பேசி எண்களை மாற்றாமல் அதே எண்ணை பிஎஸ்என்எல் சேவையை பெற்றுக் கொள்ளலாம். துண்டிக்கப்பட்ட பழைய தரைவழி தொலைபேசி இணைப்புகளை கண்ணாடி இழை மூலம் அதிவேக இணையதள இணைப்பாக பெறவும், பழைய தரைவழி தொலைபேசி எண்களுக்கு வரும் அழைப்புகள் இந்த எப்டிடிஎச் இணைப்பிலேயே எந்தவித கட்டணம் இன்றி பெறவும் வசதியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.