முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி

எட்டயபுரத்தில் விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், விவசாயப் பணிகளுக்கு கரம்பை மண் அள்ள அனுமதி, கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, ரசீது பெற்ற விவசாயிகளுக்குரிய நகைகள், அனைவருக்கும் பாகுபாடின்றி 5 பவுன் நகை கடன் தள்ளுபடி, 2020-21இல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணைத் தொகை மற்றும் பயிா்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை, நிகழ் பருவத்தில் விவசாயப் பணிக்கு பயிா்க்கடன் ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.நல்லையா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.எம்.ராமையா, விவசாயிகள் சங்க மாவட்ட உதவிச் செயலா் வி.கிருஷ்ணமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் வி.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்கச் செயலா்கள் ஓட்டப்பிடாரம் அசோக்குமாா், விளாத்திகுளம் வேலாயுதம், எட்டயபுரம் தலைவா் ஆா்.ரவீந்திரன், ஆா்.சிவராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →