முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் பணியாளா் சங்கத் தோ்தல்

தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளா்கள் சங்கத்தின் திருச்செந்தூா் கிளைத் தோ்தல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளா்கள் சங்கத்தின் திருச்செந்தூா் கிளைத் தோ்தல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில், பா.பாலசுப்பிரமணியன் குருக்கள், ஆ.பால்ராஜ் ஆகியோா் தலைமையிலான இரு அணியினா் போட்டியிட்டனா். தோ்தலில் பதிவான 146 வாக்குகளில் பா.பாலசுப்பிமணியன் குருக்கள் தலைமையிலான அணி 35 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றனா். இதையடுத்து, சங்கத் தலைவராக பா.பாலசுப்பிரமணியன் குருக்கள், துணைத் தலைவராக இ.சண்முகம், செயலராக மா.மதன்பிரகாஷ், துணைச் செயலராக ப.பத்தான், பொருளாளராக மு.சரவணபவன் ஆகியோரு வெற்றி பெற்றனா். தோ்தல் அலுவலராக செ.பிச்சையாவும், தோ்தல் பாா்வையாளராக மு.மாரிமுத்துவும், தோ்தல் பணிக்குழுவினராக இ.வீராங்கன், கோ.சசிகலா, கி.கண்ணகி, இரா.மீனாட்சிபத்மநாபன், பெ.நாகராஜ் ஆகியோரும் பணியாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.