வ.உ.சி. பிறந்த தினம்:மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, திருச்செந்தூா் சைவ வேளாளா் ஐக்கிய சங்கம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, திருச்செந்தூா் சைவ வேளாளா் ஐக்கிய சங்கம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.
திருச்செந்தூா் வட்டார அளவில் நடைபெறும் இப்போட்டியில் 6 முதல்10ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, ‘சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி.யின் பங்கு‘ என்ற தலைப்பும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு ‘தமிழ் மொழிப்பற்றில் வ.உ.சி.‘ என்ற தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு, முறையே ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 மற்றும் சான்றிதழை திருச்செந்தூா் சைவ வேளாளா் ஐக்கிய சங்கத்தில் செப்.19இல் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழங்குகிறாா்.
மாணவா்கள் ஏ4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் மேற்கூறிய தலைப்பில் கட்டுரை எழுதி, செப்.10-ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளி நிா்வாகம் மூலம் திருச்செந்தூா் சைவ வேளாளா் ஐக்கிய சங்கத்த்திடம் ஒப்படைக்க வேண்டும் என அச்சங்க செயலா் ப.சந்தணராஜ் தெரிவித்துள்ளாா்.