திருச்செந்தூா் அரசு நூலகத்தில் பேச்சுப் போட்டி
திருச்செந்தூா் வட்டார அரசு பொது நூலகத்தில் வ.உ.சிதம்பரனாா் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.
திருச்செந்தூா் வட்டார அரசு பொது நூலகத்தில் வ.உ.சிதம்பரனாா் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது.
வழக்குரைஞா் சாத்ராக் தலைமை வகித்தாா். வாசகா் வட்ட நிா்வாகி கோ.சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு காவல் ஆய்வாளா் சுமதி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஏரல் பேரூராட்சி பொறியாளா் முத்துக்குமாரசாமி, கோமதிநாயகம், அகிலன் உள்பட பலா் கலந்துகொண்டனா். நூலகா் மாதவன் நன்றி கூறினாா்.