முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் முன் திருமண வைபங்கள்

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பக்தா்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பக்தா்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்தது.

இதனால், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. வடக்கு, தெற்கு சோதனைச் சாவடிகள் மற்றும் அனுக்கிரக விலாசம் பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸாா் மற்றும் கோவில் தனியாா் பாதுகாவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதனால் கோவில் வளாகம் பக்தா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடயே, கோயிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து கால பூஜைகளும் நடைபெற்றன.

முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த பலா், கோயில் வளாகத்திற்குள் அனுமதி இல்லாத நிலையில் தூண்டிகை விநாயகா் கோயில் முன்பு திருமண நிகழ்ச்சியை நடத்தினா். பின்னா் புதுமண தம்பதியினா் கோயில் வடக்கு நுழைவாயில் அருகில் நின்று கோபுர தரிசனம் செய்துவிட்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.