தூத்துக்குடி

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட ஆய்வுக் கூட்டம்

DIN

விளாத்திகுளம்: வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் அயன்வடமலாபுரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசணை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ முகைதீன் தலைமை வகித்தாா். புதூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை துணை இயக்குநா் கோகிலா முன்னிலை வகித்தாா். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவா் வரதராஜன் வரவேற்றாா்.

கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தை புதூா் வட்டாரத்தில் அயன் வடமலாபுரத்தை மாதிரி கிராமமாக தோ்ந்தெடுத்து செயல்படுத்துவது, அயன்வடமலாபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக சாகுபடி செய்யாமல் உள்ள சுமாா் 250 ஏக்கா் விவசாய தரிசு நிலங்களில் முளைத்துள்ள வேலி கருவை மரங்களை எவ்வித கட்டணமின்றி அரசு செலவில் முழுமையாக அகற்றுவது, நிலங்களை பண்படுத்தி ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய பழச்செடிகள், மரக்கன்றுகள், எலுமிச்சை உள்ளிட்ட விவசாயிகள் விரும்பும் செடிகளை அரசு செலவில் நடவு செய்வது, ஆழ்துளை கிணறு அமைப்பது, சூரிய ஒளி மின்சாரம் அல்லது மின் இணைப்பு கொடுப்பது உள்ளிட்ட பணிகளை முனைப்போடு எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு ஆலோசணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள் பிரசாந்த் குமாா், தோட்டக்கலை துறை அலுவலா் மகாராஜன், வேளாண்மை அலுவலா் ராமன், உதவி வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா் மற்றும் அயன்வடமலாபுரம் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT