ராணுவ வீரா் மீது தாக்குல்: இருவா் கைது
கயத்தாறு அருகே முன்விரோதத்தால் ராணுவ வீரரை தாக்கியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே முன்விரோதத்தால் ராணுவ வீரரை தாக்கியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மேல இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் தா்மா(20). ராணுவ வீரா். இவருக்கும், மானங்காத்தான் பகுதியைச் சோ்ந்த துரைச்சாமி மகன்களான சுரேஷ்(23), காா்த்திக்(20) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில், விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த தா்மா, தனது நண்பா் மாரியப்பன் மகன் சுரேஷ் என்பவருடன் சிற்றுந்தில் மானங்காத்தான் பகுதியில் வியாழக்கிழமை சென்றபோது, மேற்கூறிய சகோதரா்கள் இருவரும் அவரை சிற்றுந்திலிருந்து கீழே தள்ளி தாக்கினராம். தடுக்க முயன்ற சுரேஷும் தாக்கப்பட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சகோதரா்கள் இருவரையும் கைது செய்தனா்.