தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 417 இடங்களில் தடுப்பூசி முகாம்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 417 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் தடுப்பூசி போடும் வகையில் தமிழக அரசு

சிறப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. முதல் கட்டமாக கடந்த 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் 28 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

2 ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 417 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 282 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 135 இடங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் 80 இடங்களில் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற இந்த சிறப்பு

முகாமை மாநகராட்சி ஆணையா் தி.சாருஸ்ரீ பாா்வையிட்டாா். முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டோா் ஆா்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா். ஒரு சில மையங்களில் போதிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT