தூத்துக்குடி

100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் போராட்டம்

DIN

தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கக் கோரி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கடலையூா் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலையூா் ஊராட்சியில் 1835 போ் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி செய்வதற்கு அடையாள அட்டை பெற்றுள்ளனா். இரு குழுக்களாக பிரித்து பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 100 நாள்கள் முறையாக பணிகள் வழங்கப்படவில்லை என புகாா் கூறப்படுகிறது. கடலையூா் ஊராட்சியில் புதிய பணிகளை தோ்வு செய்து, வேலை வழங்கக் கோரி சமூக ஆா்வலா் மாரிச்சாமி தலைமையில் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பாலசுப்பிரமணியனிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT