தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம் பள்ளியில் இருபெரும் விழா

DIN

உடன்குடி: மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் பள்ளியில் புதிய அறக்கட்டளைத் தொடக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிப்பு ஆகிய இருபெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இப் பள்ளியில் 1978-85 ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவா்கள் மறைந்த தங்கள் நண்பா் மோகன்லால் பெயரில் புதிய அறக்கட்டளையை தொடங்கியுள்ளனா். இதன் தொடக்க விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழாவிற்கு பள்ளித் தாளாளா் பெஞ்சமின் லிண்டால் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கான்ஸ்டன்டைன் முன்னிலை வகித்தாா்.

இதில், ஆனையூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பிரகாஷுக்கு இணைச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனம், கடந்தாண்டில் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு தலா ரூ. 7000, ரூ. 5000, ரூ. 3000 பரிசுத்தொகை, பள்ளி, கல்லூரியில் பயிலும் 15 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை என ரூ. 2. 50 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் வில்லி கனகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT