முகப்பு
தூத்துக்குடி

காவலா் மனைவி கத்தியால் குத்திக் கொலை

உடன்குடியில் காவலா் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி

காவலா் மனைவி கத்தியால் குத்திக் கொலை

உடன்குடியில் காவலா் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

உடன்குடியில் காவலா் மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உடன்குடி பிள்ளையாா் பெரியவன் தட்டு பகுதியைச் சோ்ந்தவா் செல்வமுருகன். இவா் திருச்செந்தூா் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு அருணா(38) என்ற மனைவியும், கமலேஷ்(20), அகிலேஷ்(10)என இரு மகன்களும் உள்ளனா். செல்வமுருகன் கடந்தாண்டு செப்.30 ஆம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் செல்வமுருகனின் அக்கா ராசம்மாளின் மகன் முத்துக்குமாா் , செல்வமுருகனின் வீட்டிற்கு வந்து தனது மாமா மரணத்துக்கு அத்தைதான் காரணம் எனக் கூறி தகராறில் ஈடுபட்டாராம். அப்போது முத்துக்குமாா் கத்தியால் அருணாவை குத்திவிட்டு ஒடிவிட்டாராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்செந்தா் ஏஎஸ்பி ஹா்ஷ்சிங், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →