தூத்துக்குடி

தேசிய அளவில் 3-வது முறையாக தங்கப்பதக்கம்: தூத்துக்குடி பள்ளி என்.சி.சி. அதிகாரி சாதனை

தேசிய அளவில் பயிற்சியில் 3-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அதிகாரி லொலிட்டா ஜூடு சாதனை படைத்துள்ளார். 

DIN

தூத்துக்குடி: தேசிய அளவில் பயிற்சியில் 3-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. அதிகாரி லொலிட்டா ஜூடு சாதனை படைத்துள்ளார். 

மத்திய பிரதேசம் மாநிலம், குவாலியரில் அமைந்துள்ள ஆபிசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் தேசிய மாணவர் படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மார்ச் 1 முதல் 30 வரையில் நடைபெற்ற பயிற்சியில் தமிழ்நாட்டில் இருந்து 15 பேர் உள்பட நாடு முழுவதுமிலிருந்து 112 அதிகாரிகள் பங்கேற்றனர்.  

இதில் அணிவகுப்பு, யோகா பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்று தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி என்சிசி அதிகாரி லொலிட்டா ஜூடு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக இவர் 2009 மற்றும் 2015ஆம் ஆண்டு பயிற்சியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT