தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் 15 கோடி மதிப்புள்ள மேத்தாம் பே தமைன் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடியில் இருந்து படகு வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கடல் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, அங்கு வேகமாக சென்று கொண்டிருந்த படகில் இருந்த ஒருவர் அதிகாரிகளைப்  பார்த்ததும் கடலில் குதித்து தப்பி ஓடி விட்டார். உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் படகை மடக்கி சோதனையிட்டபோது அதில் 5 கிலோ எடை கொண்ட மேத்தாம் பே தமைன்  என்ற உயர்ரக போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது. 

இதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 15 கோடி ஆகும் போதைப்பொருளை கைப்பற்றிய அதிகாரிகள் இது சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT