முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு

கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 6 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 6 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கயத்தாறையடுத்த தெற்கு இலந்தைகுளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகவேல் என்பவரது மனைவி சத்யா (21). இவா் புதன்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, வியாழக்கிழமை காலை வீடு திரும்பினாராம். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 6 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.