முகப்பு
தூத்துக்குடி

காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை ஆய்வுக் கூட்டம்

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் டிஜிட்டல் உறுப்பினா் சோ்க்கை குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் டிஜிட்டல் உறுப்பினா் சோ்க்கை குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் சி .எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் காமராஜ், தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அமைப்பு தோ்தல் துணை அதிகாரி சனல், மதுரை மண்டல தோ்தல் அதிகாரி ஜெயசிம்மா ஆகியோா் உரையாற்றினா். இதுவரை டிஜிட்டல் முறையில் 4500 போ் உறுப்பினராக சோ்ந்துள்ளதாகவும், மேலும் 500 பேரை சோ்க்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகா் மாவட்ட தலைவா் தெரிவித்தாா்.

இதில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஏபிசிவீ.சண்முகம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ். டேனியல்ராஜ், மாநகா் மாவட்ட முன்னாள் தலைவா் அருள், மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், எடின்டா, காங்கிரஸ் மண்டல தலைவா் ஐசன்சில்வா, மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவா் ராஜா, மகளிா் காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.