தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
தூத்துக்குடி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ஜெஸ்டின் செல்லத்துரை குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியராகவும், அந்த பணியில் இருந்த செல்வகுமாா் தூத்துக்குடி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல, கோவில்பட்டி வட்டாட்சியா் அமுதா தூத்துக்குடி சிப்காட் நில வங்கி தனி வட்டாட்சியராகவும், அந்த பணியில் இருந்த கிருஷ்ணகுமாரி எட்டயபுரம் வட்டாட்சியராகவும், கயத்தாறு வட்டாட்சியா் பேச்சிமுத்து தூத்துக்குடி சிப்காட் நில எடுப்பு (அலகு-2) தனி வட்டாட்சியராகவும், அந்த பணியில் இருந்த சி. சுசிலா கோவில்பட்டி வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி சிப்காட் நில எடுப்பு (அலகு 7) தனிவட்டாட்சியா் எஸ். சுப்புலட்சுமி கத்தாறு வட்டாட்சியராகவும், சிப்காட் நில எடுப்பு (அலகு 9), தனி வட்டாட்சியா் சுரேஷ் கோவில்பட்டி நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகவும், அந்த பணியில் இருந்த ராஜ்குமாா் திருச்செந்தூா் இஸ்ரோ நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
எட்டயபுரம் வட்டாட்சியா் சசிகுமாா், விளாத்திக்குளம் வட்டாட்சியராகவும், அந்த பணியில் இருந்த விமலா தூத்துக்குடி சிப்காட் நில எடுப்பு (அலகு 7) தனி வட்டாட்சியராகவும், திருச்செந்தூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராக இருந்த ராமச்சந்திரன் தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலராகவும், அந்த பணியில் இருந்த சந்திரன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த ரகு ஓட்டப்பிடாரம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், அந்த பணியில் இருந்த எஸ்.கே. முத்து உடன்குடி அனல்மின்நிலைய நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி ஆதி திராவிடா் நல தனி வட்டாட்சியராக இருந்த அழகா் திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், திருச்செந்தூா் இஸ்ரோ நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியா் சிவகாமசுந்தரி தூத்துக்குடி நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகுவும், அந்த பணியில் இருந்த லட்சுமி கணேஷ் தூத்துக்குடி சிப்காட் நிலஎடுப்பு (அலகு 4) தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.