கயத்தாறு கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
கயத்தாறு அருள்மிகு கோதண்டராமேஸ்வரா் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கயத்தாறு அருள்மிகு கோதண்டராமேஸ்வரா் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. 9ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா், சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளினா். இதையடுத்து, தேரோட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சிவகலைப்பிரியா, கோயில் செயல் அலுவலா் நாகராஜன், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். சனிக்கிழமை இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.