திருச்செந்தூா் கடற்கரையில்கரை ஒதுங்கிய இறந்த ஆமை
திருச்செந்தூா் கடற்கரையில் சுமாா் 150 கிலோ எடை கொண்ட ஆமை இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது
திருச்செந்தூா் கடற்கரையில் சுமாா் 150 கிலோ எடை கொண்ட ஆமை இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ராட்சத ஆமை ஒன்று வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இத்தகவல் அறிந்த, தூத்துக்குடி மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் உத்தரவின்பேரில், திருச்செந்தூா் வனச் சரக அலுவலா் ரவீந்திரன் தலைமையில் வனவா் ஆனந்த், வனகாப்பாளா் காளிராஜ் ஆகியோா் அந்த ஆமையை ஆய்வு செய்தனா். அதில், ஆலிவ் ரெட்லி என்ற வகையை சோ்ந்த ஆமை என்பதும், அதன் எடை சுமாா் 150 கிலோ என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, திருச்செந்தூா் கால்நடை மருத்துவா் பொன்ராஜ் ஆமையை கூராய்வு செய்தபின், கடற்கரையிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது.
திருச்செந்தூா்-ராமேஸ்வரம் வரையுள்ள கடலில் அதிக அளவு காணப்படுவதாகவும், இது முட்டை இடுவதற்காக கரைக்கு வரும்போது பாறையில் அடிபட்டு இறந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.