முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

இனாம்மணியாச்சி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

இனாம்மணியாச்சி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இனாம்மணியாச்சி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறிடத்துக்கு மாற்றக் கூடாது, இவ்வூராட்சிப் பகுதிக்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் சீராக குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் பாபு தலைமை வகித்தாா். நகரச் செயலா் சரோஜா, நகரக்குழு உறுப்பினா் பாரதிகண்ணம்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ே ராஜேந்திரன், கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ், வட்டாரக் குழு உறுப்பினா் சிங்கராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா்கள் முனியசாமி, செல்லையா, அலாவுதீன், ஜோசப், அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.