கட்டாரிமங்கலம் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, அழகியகூத்தா்-சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநந்தியம் பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளானோா் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.