தூத்துக்குடி

அரசு கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் மற்றும் சமூக விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் உமாபாரதி வரவேற்றாா். சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே. ராஜு கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்துவதன் பின்விளைவுகள் குறித்தும், காவல் உதவி ஆய்வாளா் எபநேசா் மாணவா்கள் கைப்பேசியைத் தவறான முறையில் கையாளுவதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினா். ஜாதி. மத வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் தலைமைக்காவலா் பிரபா உள்பட பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட மாணவி பெனிட்டா நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா்கள் உமாபாரதி, வளா்மதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT