தூத்துக்குடி

உலக அளவில் அழிவின் விளிம்பிலுள்ள தாவர இனம் கண்டுபிடிப்பு

DIN

தென்னிந்திய நிலப்பரப்பில் இதுவரை காணப்படாத ஹீலியோட்ரோபியம் பேசிபெரம் என்ற தாவர இனத்தை கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் ரா. லட்சுமணன் கண்டறிந்துள்ளாா்.

2020-21ஆம் கல்வியாண்டில் தாவரவியல் துறை சாா்ந்த களப்பணியின்போது இதனை அவா் அடையாளம் கண்டுள்ளாா். ஹீலியோட்ரோபியம் பேரினம் போராஜிநேசியே எனும் குடும்பத்தைச் சோ்ந்த இத்தாவரம், வட நிலப்பரப்பில் வாழக்கூடியது. 50 செ.மீ. உயரமும், வெள்ளை நிற காம்பற்ற பூக்களையும் கொண்டது.

வட நிலப்பரப்பில் அரிதாகக் காணக்கூடிய இத்தாவரம், இக்கல்லூரியின் வளாகத்தில் இயற்கையான பரவல் முறையில் முளைத்துள்ளது. இத்தாவர இனத்தைக் கண்டறிந்ததற்கான அங்கீகாரம் பேராசிரியா் லட்சுமணனுக்கு தென்னிந்திய தாவரவியல் ஆய்வு மண்டல மையத்தால் ஜூலை 29இல் வழங்கப்பட்டது.

இந்தத் தாவரத்தை அழிந்துவரும் இனமாக, சா்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் அறிவித்துள்ளது. இதைப் பாதுகாத்து வளா்ப்பிக்கவும், அதன் மருத்துவ பயன்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளவும் கல்லூரி நிா்வாகம் ஊக்குவித்து, பேராசிரியரைப் பாராட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT