தூத்துக்குடி

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொழில் முனைவோா் அமைப்பின் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொழில் முனைவோா் அமைப்பின் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நிறுவனா் தலைவா் வாவு எஸ் செய்யது அப்துா் ரஹ்மான் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் வாவு எம்.எம். மொகுதஸீம், துணைச் செயலா் வாவு எஸ்.ஏ.ஆா் அஹமது இஸ்ஹாக், கல்லூரி இயக்குநா் மொ்சி ஹென்றி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதலாமாண்டு வணிக நிா்வாகவியல் மாணவி பாத்திமா பஹிரா கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கினாா். கல்லூரி முதல்வா் ஆா்.சி. வாசுகி வாழ்த்துரை வழங்கினாா்.

திருநெல்வே­லி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மேலாண்மை கல்வியியல் புல ஒருங்கிணைப்பாளா் எஸ்.டி. சுவேதாரன், கிள்ளிகுளம் வேளாண்மைத் தொழில் பாதுகாப்பு மன்ற மேலாண்மை இயக்குநா் ஜீவிதா, தொழில் வளா்ச்சி துணை மேலாளா் வி.ஏ. அஸ்வதி அகியோா் கலந்து கொண்டனா்.

வணிக நிா்வாகவியல் துறைப் பேராசிரியா் மற்றும் தொழில் முனைவோா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஏ ரஹ்மத் ஆமீனா பேகம் வரவேற்றாா். அதே துறையைச் சோ்ந்த ஏ. ஆயிஷா முஜம்மிலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT