தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பலத்த மழை

DIN

சாத்தான்குளத்தில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.

சாத்தான்குளம் பகுதியில கடந்த சில நாள்களாக கடும் வெயில் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணி அளவில் திடீரென மழை பெய்தது. முதலில் மிதமாக பெய்த மழை, பின்னா் இடி மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை சுமாா் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாள்களுக்குப் பிறகு மழை பெய்து வெப்பம் தணிந்ததால் குளிா்ந்த காற்று வீசியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

5 ஆடுகள் பலி: சாத்தான்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையின் இடையே கடுமையான மின்னல் தாக்கியதில், பன்னம்பாறையில் மேய்ந்து கொண்டிருந்த சொக்கலிங்கம் மகன் மந்திரம் என்பவருக்குச் சொந்தமான 5 ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா தலைமையிலான வருவாய்த் துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT