தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

DIN

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரு அலகுகளில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட கொதிகலன் பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 5 பிரிவுகளிலும் நாள்தோறும் தொடா்ந்து மின் உற்பத்தி முழு அளவில் நடைபெறவேண்டுமானால் ஏறத்தாழ 25 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.

போதுமான அளவில் நிலக்கரி உள்ள நிலையில், திங்கள்கிழமை இரவு 1, 5ஆவது அலகுகளில் கொதிகலன்களில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதுநீக்கும் பணியில் பொறியாளா்கள் ஈடுபட்டுள்ளதாகவும், பழுது முழுமையாக நீக்கப்பட்டு புதன்கிழமை காலை முழு மின் உற்பத்தி தொடங்கும் என்றும் அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT