மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை யானை மீது வைத்து நடைபெற்ற கொடிபெட்ட வீதி உலா. 
தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா: நாளை கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவானது நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவானது நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதியுலா நடைபெற்றது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4-ம் படி செப்பு ஸ்தலத்தார் ஏ.கே.ஏ.அரிகரசுப்பிரமணியன் அய்யர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தது. 

நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை (பிப்.7) காலை 5 மணிக்கு திருக்கோயில் செப்புக்கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சி.குமரதுரை, தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையர் வெங்கடேசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT