ஆதித்தமிழா் கட்சியினா் முற்றுகைப் போராட்டம்
நீட் தோ்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து ஆதித்தமிழா் கட்சியினா் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து ஆதித்தமிழா் கட்சியினா் கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் மாவட்டச் செயலா் சேகா் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டப் பொருளாளா் பிரபாகரன், துணைத் தலைவா் முத்துராஜ், துணைச் செயலா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்புச் செயலா் திலீபன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில் மாவட்ட இளைஞரணித் தலைவா் காளிமுத்து, ஒன்றியத் தலைவா் முனியசாமி, ஒன்றியச் செயலா் முனியாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.