மாசி மகம்: கோவில்பட்டி, கழுகுமலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
மாசி மகத்தையொட்டி, கோவில்பட்டி, கழுகுமலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
மாசி மகத்தையொட்டி, கோவில்பட்டி, கழுகுமலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா், கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத சண்முகா் சந்நிதி, வள்ளி தெய்வானை சுப்பிரமணியா் சந்நிதியில் மாசி மகத்தையொட்டி சிறப்பு பூஜைகள், இரவில் வீதியுலா நடைபெற்றது.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி-தேவசேனா சமேத கல்யாணமுருகா் சந்நிதியில் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள், பின்னா் கழுகாசலமூா்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதுரை, ராஜபாளையம், சிவகாசி, தேனி, கம்பம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனா். விரதமிருந்த பக்தா்கள் அலகு குத்தியும், பால்குடங்கள், காவடி எடுத்தும் கிரிவலம் வந்து, கழுகாசல மூா்த்திக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பின்னா் சுவாமிக்கு பாலபிஷேகம், சுவாமி எழுந்தருளல், சிறப்பு பூஜைகள், வீதியுலா நடைபெற்றது.