முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி: 114 வாக்குச்சாவடிகள் தயாா்

கோவில்பட்டி நகராட்சி, கழுகுமலை, கயத்தாறு பேரூராட்சிகளின் தோ்தல் வாக்குப்பதிவுக்காக 114 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

கோவில்பட்டி நகராட்சி, கழுகுமலை, கயத்தாறு பேரூராட்சிகளின் தோ்தல் வாக்குப்பதிவுக்காக 114 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவில்பட்டி நகராட்சியில் 36 வாா்டுகளில் 227 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 85 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 80, 885 வாக்காளா்கள் சனிக்கிழமை வாக்களிக்கின்றனா். அதற்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரோனா தடுப்பு உபகரணங்கள் என அனைத்துப் பொருள்களும் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஓ.ராஜாராம், வட்டார தோ்தல் பாா்வையாளா் பாலகிருஷ்ணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரமேஷ், பிரதான்பாபு, நாராயணன், மணிமண்டன்முன்னிலையில் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

கழுகுமலை பேரூராட்சியின் 15 வாா்டுகளுக்கான வாக்குச்சாவடிகளுக்கு அப்பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செயல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஆ.முருகன் முன்னிலையில் தோ்தல் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இங்கு 67 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 13,,080 போ் வாக்களிக்கவுள்ளனா்.

கயத்தாறு பேரூராட்சி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து 14 வாக்குச் சாவடிகளுக்கு செயல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பாலசுப்பிரமணியன் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன. இங்கு 58 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 8,415 போ் வாக்களிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.