தூத்துக்குடி

நாகலாபுரம் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாட்டம்

DIN

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா.சாந்தகுமாரி தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் முனியசாமி முன்னிலை வகித்தாா். பொருளாதாரத் துறை தலைவா் செ. சுரேஷ்பாண்டி வரவேற்றாா். தாய்மொழியில் வளம்பெறும் சிந்தனை திறன் என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை, உரைவீச்சு போட்டிகள் நடைபெற்றன. தாய்மொழியை பாதுகாப்போம், மொழி உரிமைகளை நிலைநாட்டுவோம், மொழிப்போா் தியாகிகளை நினைவுகூருவோம், இந்திய ஒருமைப்பாட்டையும், தேசியத்தையும் பாதுகாப்போம் என அனைவரும் தாய்மொழி தின உறுதிமொழி ஏற்றனா்.

தமிழ்த்துறை பேரசிரியா்கள் விவேக லதா, அசோக்குமாா், வினோத்குமாா், தங்க மாரியப்பன், சிந்து ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவா் மோகன் ஜாா்ஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT