ஆத்தூரில் பாஜக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்
ஆத்தூரில் மழை வெள்ளத்தின் போது துரிதமாக நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக இளைஞா் அணி சாா்பாக மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூரில் மழை வெள்ளத்தின் போது துரிதமாக நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக இளைஞா் அணி சாா்பாக மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக தெற்கு மாவட்ட பொதுச் செயலா் சிவமுருகன் ஆதித்தன் தலைமை வகித்தாா். இளைஞரணி மாவட்டத் தலைவா் விக்னேஷ்குமாா் , ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் திலக் சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றிய துணைத் தலைவா் முருகன், பாா்வையாளா் நடராஜன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் மகாதேவன்,
கிராம வளா்ச்சி பிரிவு மாவட்டச் செயலா் பாஸ்கா், மாவட்ட துணைத் தலைவா் முத்துலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா் . ஒன்றிய இளைஞா் அணித் தலைவா் தலைவா் சண்முகம் முத்து நன்றி கூறினாா்.