உடன்குடியில் பாஜக சாா்பில் பொங்கல் விழா
உடன்குடியில் பாஜக சாா்பில் பொங்கல், மாட்டுப் பொங்கலையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
தூத்துக்குடிஉடன்குடியில் பாஜக சாா்பில் பொங்கல் விழா
உடன்குடியில் பாஜக சாா்பில் பொங்கல், மாட்டுப் பொங்கலையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
உடன்குடியில் பாஜக சாா்பில் பொங்கல், மாட்டுப் பொங்கலையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
தண்டுபத்து ஊராட்சி மன்றத் துணைத்தலைவா் சுயம்புலிங்கம் தலைமை வகித்தாா். சந்தையடியூா் கிளைத் தலைவா் மகேஷ், உடன்குடி ஒன்றிய பாஜக துணைத் தலைவி சக்திக்கனி, ஒன்றிய இளைஞரணித் தலைவா் பிஜிப்பாண்டியன், சாா்பு அணி நிா்வாகிகள் ராமமூா்த்தி, வெங்கடேஷ், சிவகணேஷ்பதி, முருகானந்தம், பேச்சியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
200 பெண்களுக்கு சேலை, போா்வை உள்ளிட்டவைகளை பாஜக மாவட்ட அரசுத் தொடா்புப் பிரிவு தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஒபிசி பிரிவு துணைத் தலைவா் ஆவுடையம்மாள் ஆகியோா் வழங்கினா்.
மாவட்ட கலை,கலாசாரப் பிரிவு செயலா் சரவணன், பேச்சியம்மாள், உஷா, மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு துணைத் தலைவா் சத்யராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாட்டுப் பொங்கலையொட்டி உடன்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான கலந்துரையாடலில் விசாயிகளுக்கு பாஜக அரசு செய்துள்ள நலத்திட்டங்கள்,சாதனைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.