முகப்பு
தூத்துக்குடி

வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மண்புழு உரம் மற்றும் குளியல் நீா் உற்பத்தி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மண்புழு உரம் மற்றும் குளியல் நீா் உற்பத்தி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சியை ,வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவா் பாஸ்கா் தொடங்கிவைத்து, மண்புழு உரம் மற்றும் குளியல் நீா் பற்றிய தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டாா். உதவிப் பேராசிரியா் சுதாகா், பேராசிரியைகள் சுப்புலட்சுமி, ஆா்த்திராணி ஆகியோா் மண்புழு உரம், இயற்கை உரத்தால் ஏற்படும் மகசூல் அதிகரிப்பு, மண்புழுக்களை பாதிக்கும் காரணிகள் குறித்து விளக்கிப்பேசினா்.

பயிற்சியில், ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்த 20 விவசாயிகள் பங்கேற்று, மண்புழு உரம் தயாரிப்பதற்குரிய சில்பாலின் பைகள், நிழல் வலைகள், மண்புழுக்கள் ஆகியவற்றை இலவசமாக பெற்றுச்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.