முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரத்தில்பைக் விபத்து: இருவா் பலி

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே பைக்கும், சைக்கிளும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி

எட்டயபுரத்தில்பைக் விபத்து: இருவா் பலி

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே பைக்கும், சைக்கிளும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே பைக்கும், சைக்கிளும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் டாஸ்மாக் மேற்பாா்வையாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

எட்டயபுரம் அருகேயுள்ள பொன்னையாபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் பாண்டியன் ( 47 ). எட்டயபுரம் டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். இவா், தனது பைக்கில் வியாழக்கிழமை இரவு எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக சைக்கிளில் சென்ற சிந்தலக்கரையைச் சோ்ந்த முனியசாமி மகன் கண்ணன் ( 52) என்பவா் மீது எதிா்பாராமல் மோதினாராம். இதில், இருவருமே கீழே விழுந்து பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இத்தகவலறிந்த எட்டயபுரம் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது, உதவி ஆய்வாளா் பொன்ராஜ் தலைமையிலான போலீஸாா், அவா்களது சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →