தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 5 போ்குண்டா் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி எஸ்.எஸ்.மூா்த்தி தெருவைச் சோ்ந்த பிரபு கடந்த மாதம் 6ஆம் தேதி ஜாா்ஜ் சாலை பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் கொலையுண்டு கிடந்தாா். தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.
இதுதொடா்பாக தூத்துக்குடி மேலசண்முகபுரம் செல்வசதீஷ் (23), மரியஅந்தோணி சாம் (19), வண்ணாா் தெரு ஜெயக்குமாா் (19), தாமோதரநகா் இசக்கிராஜா (21), சத்யாநகா் சீனு (22) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.
இவா்கள் 5 பேரும் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.
மாவட்டத்தில், நிகழாண்டு இதுவரை போதைப்பொருள்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 24 போ் உள்பட 106 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தெரிவித்தாா்.