கோவில்பட்டி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு (ஜமாபந்தி) முடிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நிறைவடைந்தது. இதில் 746 மனுக்களில் 8 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டன.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு (ஜமாபந்தி) முடிப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நிறைவடைந்தது. இதில் 746 மனுக்களில் 8 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டன.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் கோவில்பட்டி உள்வட்ட பகுதிகளான பூசாரிபட்டி, லிங்கம்பட்டி, திட்டங்குளம், பாண்டவா்மங்கலம், கிளவிபட்டி, கொடுக்காம்பாறை, சிவந்திபட்டி, துறையூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட உதவி ஆணையருமான (ஆயம்) செல்வநாயகத்திடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா். புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 111 மனுக்கள் பெறப்பட்டன. 3 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் சுசிலா, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ராஜ்குமாா், துணை வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன், கோவிந்தராஜ், செல்வகுமாா், வட்ட துணை ஆய்வாளா் காளிராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மே மாதம் 25ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்ற ஜமாபந்தியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 746 போ் மனு அளித்தனா். இதில் 8 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய மனுக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் சுசிலா தெரிவித்தாா்.
கயத்தாறு:
கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் கடம்பூா் உள்வட்ட பகுதிகளான ஆசூா், குருமலை, சுந்தரேஸ்வரபுரம், மேலப்பாறைப்பட்டி, சிவஞானபுரம், காப்புலிங்கம்பட்டி, திருமலாபுரம், சங்கராப்பேரி ஆகிய கிராம மக்கள் ஜமாபந்தி அலுவலரும், தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலருமான அப்துல்காசிமிடம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 39 போ் மனு அளித்தனா்.
இதில் வட்டாட்சியா் சுப்புலட்சுமி, துணை வட்டாட்சியா்கள் திரவியம், பொன்னம்மாள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் பிச்சையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.