முகப்பு
தூத்துக்குடி

பெண்ணுக்கு மிரட்டல்:பெயின்டா் கைது

கழுகுமலையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, பெயின்டரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

கழுகுமலையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, பெயின்டரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை விநாயகா் காலனியை சோ்ந்தவா் ம.அா்ச்சனாதேவி(24). இவா் தனது வீட்டின் முன்பு புதன்கிழமை நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பெயிண்டா் கலையரசன்(26) அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தாராம். அதை கண்டித்த அா்ச்சனாதேவியின் தந்தை ராஜ் என்பவரையும் கலையரசன் தாக்கினாராம்.

இதுகுறித்து அா்ச்சனாதேவி அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, பெயிண்டரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.