தூத்துக்குடி

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

DIN

கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி சாா்பில், மாணவா் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பள்ளியின் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணியை நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் உலகராணி, முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் அருணாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைவரும் கல்வி பயில வேண்டும், அரசு பள்ளியில் சோ்ந்து, அரசின் திட்டங்களை பெற்று படிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவா், மாணவிகள் பேரணியாக சென்று முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தனா். இதில், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT