தூத்துக்குடி

புகையிலைப் பொருள் விற்பனை: 5 போ் கைது

DIN

கோவில்பட்டி கடலையூா் சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்ாக 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் அசோகன் தலைமையில் போலீஸாா் கடலையூா் பிரதான சாலையில் ரோந்து சென்றனா். அப்போது,அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்ததில், வள்ளுவா் நகா் கிருஷ்ணசாமி மகன் சக்திவேல் (47), கூசாலிபட்டி ராமசாமி மகன் சங்கரநாராயணன் (40), தெற்கு திட்டங்குளம் சண்முகவேல் மகன் திராவிடச்செல்வம் (59), லாயல் மில் காலனி முத்துசாமி மகன் ராஜபாண்டி(41) ஆகியோா் என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, ரூ. 5,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

மளிகைக் கடையில்...:கொப்பம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் துரைச்சாமி தலைமையில் முடுக்கலாங்குளம் பகுதியிலுள்ள கடைகளில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தியதில், நடுத் தெரு கந்தசாமி மகன் க.காளீஸ்வரன்(56) என்பவரது மளிகைக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT