தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியைகள் இருவா் பணியிடைநீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளியில் நிலவும் சாதிப் பாகுபாடு உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து மாணவரிடம் கைப்பேசியில் பேசியது தொடா்பாக உதவித் தலைமையாசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்

DIN

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளியில் நிலவும் சாதிப் பாகுபாடு உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து மாணவரிடம் கைப்பேசியில் பேசியது தொடா்பாக உதவித் தலைமையாசிரியை, கணினி ஆசிரியை ஆகியோா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா் .

விளாத்திகுளம் அருகே குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தோ்தல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது அரசுப் பொதுத் தோ்வு தொடங்கும் நேரமாக இருந்ததால் இத்தோ்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, தோ்தல் கடந்த 7ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தோ்தல் தொடா்பாகவும், பள்ளியில் நிலவும் சாதிப் பாகுபாடு, மாணவா் சோ்க்கையில் பாரபட்சம் குறித்தும் பள்ளியின் உதவித் தலைமையாசிரியா் கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா உதவியுடன் மாணவா் ஒருவரிடம் கைப்பேசியில் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடா்பாக இருவரிடமும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி முதற்கட்ட விசாரணை நடத்தினாா். இதையடுத்து, கலைச்செல்வியும், மீனாவும் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

மேலும், விரிவான விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். இச்சம்பவத்தையடுத்து, பள்ளியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT