முகப்பு
தூத்துக்குடி

மின்னல் பாய்ந்து உயிரிழந்தபெண் குடும்பத்துக்கு நிதியுதவி

வாஞ்சிமணியாச்சி அருகே மின்னல் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவி வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

வாஞ்சிமணியாச்சி அருகே மின்னல் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவி வழங்கப்பட்டது.

கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சோ்ந்த தம்பதி சிவகுமாா் - சரவணச்செல்வி. இவா்கள், வாஞ்சிமணியாச்சி அருகேயுள்ள சங்கம்பட்டியில் வசிக்கும் உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை சென்றிருந்தபோது, அங்குள்ள நிலத்தில் சரவணச் செல்வி பருத்தி எடுத்தாராம். அப்போது, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் அவா் மீது மின்னல் பாய்ந்ததாம். அதில் அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்கான ஆணையை, அவரது கணவா் சிவகுமாரிடம் கோட்டாட்சியா் மகாலட்சுமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது, வட்டாட்சியா்கள் நிஷாந்தினி (ஓட்டப்பிடாரம்), சுசிலா (கோவில்பட்டி), சங்கம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ஜெகதீஷ் கண்ணன், கோவில்பட்டி வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.